ஒரு லட்சத்துக்கு கீழ் சென்ற தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 17)
இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக....
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 17) சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 99,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை (நவ.14) கிராமுக்கு 120 குறைந்து, ரூ.12,695-க்கும், சவரன் ரூ. 960 குறைந்து, ரூ.1,01,560-க்கும் விற்பனையானது.
Advertisement
Advertisement
இதனிடையே, வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 75 குறைந்து, ரூ. 12,540-க்கும், சவரனுக்கு ரூ. 600 குறைந்து, ரூ. 1,00,320-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 17) சவரனுக்கு ரூ. 560 குறைந்து ஒரு சவரன் ரூ. 99,760-க்கும் கிராமுக்கு ரூ. 70 குறைந்து ஒரு கிராம் ரூ. 12,470-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 190-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 1.90 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
கடந்த 7 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 6,280 குறைந்துள்ளது. சுமார் 320 நாள்களுக்குப் பிறகு ஒரு சவரன் தங்கம், ஒரு லட்சத்துக்கு கீழ் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.