மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று(அக். 8) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் புதிய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
சமீபத்தில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
Advertisement
Advertisement
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.எம். நாசர், செந்தில் பாலாஜி மற்றும் ஆர். ராஜேந்திரன், கோ.வி. செழியன் ஆகிய நால்வரும் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். மேலும் அமைச்சரவையிலும் சில அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டன.
அதன்படி, அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகான முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.
தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்த நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இக்கூட்டத்தில், தொழில் துறை உட்பட சில முக்கியத் துறைகளுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.