அடுத்த 2 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய செய்திகள்அடுத்த 2 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவு, கேரளம் மற்றும் வடதமிழக பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் புதன்கிழமை (அக்.9) ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிக்க | ஜம்மு - காஷ்மீர்: 2 ராணுவ வீரர்களை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள்!
இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதனிடையே, சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை லேசான முதல் மிதமான மழை பெய்தது.