பறக்கும் ரயில் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை எப்போது?

சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை தொடர்பாக...

DIN

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் தடத்தில் நவம்பர் மாதம் முதல் மீண்டும் ரயில் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் திட்டுமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 ரயில் வழித்தடம் உள்ளது. இதில், 2 வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களுக்கு ஒரு வழித்தடம் மட்டுமே உள்ளதால், அவை காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது.

சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு மின்சார ரயில்களை இயக்கும் வகையில் கடந்த ஆக. 2-ஆம் தேதி சேவை மாற்றி அமைக்கப்பட்டது.

சென்னை கடற்கரை - எழும்பூர் ரயில் முனையம் இடையே அமைக்கப்பட்டு வரும் 4-ஆம் வழித்தடப் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மீண்டும் பறக்கும் ரயில் சேவை நவம்பர் மாதம் தொடங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு எளிதில் செல்லும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் 1997-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

முதல் கட்டமாக சென்னை கடற்கரை முதல் மயிலாப்பூா் வரையிலும், இரண்டாம் கட்டமாக 2007-ஆம் ஆண்டு மயிலாப்பூா் முதல் வேளச்சேரி வரையிலும் தொடங்கப்பட்டது.

இந்த பறக்கும் ரயில் சேவையானது, வேளச்சேரியிலிருந்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வழியாக பரங்கிமலை வரை இயக்கப்படுவதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாரும் சாதகமாக செயல்பட்டு ஷுப்மன் கில் கேப்டனாகவில்லை: கௌதம் கம்பீர்

கோல்ட்ரிஃப் உள்பட 3 இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம்! - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கோவை உள்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழை!

ஜீத்து ஜோசப் - ஆசிப் அலியின் மிராஜ்: ஓடிடி ரிலீஸ் தேதி!

ஒரே ஒரு பார்வை... ஜோனிடா காந்தி!

SCROLL FOR NEXT