வாஷிங்டன்: ஹெலீன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஃபுளோரிடாவை அடுத்ததாக சக்தி வாய்ந்த மில்டன் புயல் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஃபுளோரிடா மாகாணத்தில் தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முன்னெச்சரிகை நடவடிக்கையாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்ததால் உயிர்ச்சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது.
செயின்ட் லூசி கவுண்டியில் உள்ள மொபைல் ஹோம் பூங்காவில் இருந்து இருபத்தைந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் 6 பேர் உயிரிழந்தனர் .
இதையும் படிக்க | ஐ.நா. அமைதிப் படை நிலைகளில் இஸ்ரேல் தாக்குதல்
மில்டன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் மில்டன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் அந்த பகுதிகளை சேர்ந்த உள்ளூர் அதிகாரிகள் அறிவிக்கும் வரை வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.