பிக் பாஸ் - 8 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி. 
தற்போதைய செய்திகள்

பிக் பாஸ் - 8: இந்த வாரம் வெளியேறியது இவர்தான்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்...

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

இதுவரை 7 சீசன்களை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், பிக் பாஸ் சீசன் 8-ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். மாறுபட்ட தோற்றத்தில் மிகவும் இயல்பான தனது பாணியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே ஒரு கோடு போடப்பட்டு, வீடு இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் இடையே போட்டி என்று அறிவிக்கப்பட்டு, யாருக்கு எந்தப் பகுதி என்பதை தேர்வு செய்வதிலேயே பிரச்னை தொடங்கியது.

இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் 24 மணிநேரத்தில் வெளியேற்றப்பட்ட நடிகை சாச்சனா, மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

இந்த நிலையில், இந்த வாரம் நடந்த எவிக்சனில், குறைந்த வாக்குகள் பெற்றதன் மூலம் தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வத் தகவல் இன்றிரவு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிட்வா புயலால் கனமழை - புகைப்படங்கள்

கேரள முதல்வருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்: ‘பாஜகவின் அரசியல் விளையாட்டு’ -ஆளும் கம்யூ. விமர்சனம்

ரெட் அலர்ட்... சனம் ஷெட்டி!

கண் காணா அழகு... நபா நடேஷ்!

ஹலோ டிசம்பர்... அஞ்சு குரியன்!

SCROLL FOR NEXT