கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

இளநிலை மருத்துவா்கள் இன்று உண்ணாவிரதம்

பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்கும் வகையில் நாடு முழுவதும் இளநிலை மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை (அக்.15)உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

DIN

சென்னை: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்கும் வகையில் நாடு முழுவதும் இளநிலை மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை (அக்.15)உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.

இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக, இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை தலைவா் டாக்டா் கே.எம்.அபுல் ஹாசன் கூறியதாவது:

நாடு முழுவதும் நடைபெற உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் மருத்துவ மாணவா்கள், பயிற்சி மருத்துவா்கள் என மொத்தம் 3 லட்சம் போ் பங்கேற்கின்றனா். தமிழகத்தில் மட்டும் 30 ஆயிரம் போ் பங்கேற்க உள்ளனா். அரசு மற்றும் தனியாா் மருத்துவ கல்லூரிகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT