உச்ச நீதிமன்றம் 
தற்போதைய செய்திகள்

குடியுரிமைச் சட்டப் பிரிவு 6ஏ செல்லும்: உச்ச நீதிமன்றம்

வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்களுக்கு இந்திய குடியுரிமை

DIN

வங்கதேசத்தில் இருந்து அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட இந்திய குடியுரிமை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

ஜனவரி 1, 1966 முதல் மார்ச் 25, 1971-க்கு இடையில் வங்கதேசத்திலிருந்து அசாமுக்கு சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக 1985-ஆம் ஆண்டில் அசாம் ஒப்பந்தத்தில் பிரிவு 6ஏ இணைக்கப்பட்டது.

இந்நிலையில், அசாம் குடியேற்றத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் குடியுரிமைச் சட்டம் 1955ன் பிரிவு 6ஏ-வை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், குடியுரிமைச் சட்டம் 6ஏ சட்டப் பிரிவு செல்லும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

குடியுரிமைச் சட்டப் பிரிவு 6ஏ செல்லும்

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், எம்.எம். சுந்தரேஷ் மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் வழங்கிய ஒருமித்த தீர்ப்பில், புதிதாக சட்டம் இயற்றும் உரிமை நாடாளுமன்றத்துக்கு உள்ளதாக தெரிவித்தனர்.

நீதிபதி ஜே.பி. பார்திவாலா மட்டும், குடியுரிமைச் சட்டப் பிரிவு 6 ஏ அரசிலமைப்புச் சட்டத்திற்கு எதிராக உள்ளதாக தீர்ப்பளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT