துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலி!
துணி துவைக்க சென்றபோது நடந்த சோகம்.
மேட்டூர் அருகே ஏரியில் துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வீரக்கல் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவலிங்கம், இவருடைய மகள் சிவருந்தினி (ரேவதி) (20), மகன் சிவஸ்ரீ (10). அதே பகுதியை சேர்ந்த பெயின்டர் முனுசாமி மகள் ஜீவதர்ஷினி (எ) திவ்யதர்ஷினி(14). இவர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள கொத்தி குட்டை ஏரியில் இன்று(அக். 20) காலை துணி துவைக்க சென்றனர்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற மூன்று பேரும் நீச்சல் தெரியாததால் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர். 3 பேரும் நீரில் மூழ்கியதை கண்ட அக்கம் பக்கத்தினர் பல மணி நேரம் தேடி 3 பேரின் சடலத்தை ஏரியில் இருந்து மீட்டனர்.
Advertisement
Advertisement
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நங்கவள்ளி போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேதே பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரியில் மூழ்கி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.