முகப்பு
தற்போதைய செய்திகள்

கங்குவா படத்தின் புதிய பாடல்!

வெளியானது ‘வாமோஸ் பிரிங்கார் பேப்’ பாடல்.

Updated On : 21 அக்டோபர், 2024 at 6:35 PM
பகிர்:

கங்குவா திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

சூர்யா - சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றதால், இப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. பின், வேட்டையன் திரைப்படத்தின் வெளியீட்டால், கங்குவா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக பாபி தியாலும் நடித்துள்ளனர்.

படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற அக். 26 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், படத்தில் இடம்பெற்ற ‘வாமோஸ் பிரிங்கார் பேப்’ என்கிற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடலை தேவிஸ்ரீ பிரசாத், லவிதா லோபோ ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை விவேகா எழுதியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.