பாலாற்றில் பொங்கிய நுரையுடன் ஓடும் வெள்ளநீர் 
தற்போதைய செய்திகள்

பாலாற்றில் பொங்கிய நுரையுடன் ஓடும் வெள்ளநீர்: விவசாயிகள், கிராம மக்கள் வேதனை

ஆம்பூர் அருகே பாலாற்றில் கலக்கும் தோல் கழிவு நீரால் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

DIN

பெருமழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது ஆம்பூர் அருகே பாலாற்றில் கலக்கும் தோல் கழிவு நீரால் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு மற்றும் பெரிய கொம்மேஷ்வரம் பகுதியில் பாலாற்றில் மழை வெள்ளம் சென்று கொண்டிருக்கும் நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அருகாமையில் செயல்பட்டு வரும் சில தனியார் தோல் தொழிற்சாலைகள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை இரவு நேரங்களில் நேரடியாக பாலாற்றில் திறந்து விடுவதால் ஆற்று நீர் முழுவதும் வெள்ளை நுரை ததும்பி காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் பாதிக்கப்படுவதாகவும், ஆடு மாடுகளுக்கு நோய்கள் ஏற்படுவதால் இதனை தடுக்கக் கோரி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பலமுறை புகார் அளித்தனர்.

மேலும் ஏற்கனவே மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்டம் நிர்வாகம் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாத ஆம்பூர் சுத்திகரிப்பு நிலைய அலுவலர்கள் மற்றும் சில தனியார் தோல் தொழிற்சாலைகள் தற்போது மீண்டும் ஆற்றில் கழிவு நீரை திறந்து விட்டிருக்கும் செயல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு காற்றில் பறக்கிறதா? என கேள்வி எழுப்பும் அந்த பகுதி மக்கள் பாலாற்றில் செல்லும் வெள்ள நீரை தேக்கி வைத்து நடவடிக்கை எடுக்காத அரசு, மழைக் காலங்களில் வரும் மழை நீரில் தோல் தொழிற்சாலை கழிவு நீரை தொடர்ந்து கலந்து விடுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது என கிராம மக்கள், விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரவி மோகனின் ப்ரோ கோட் பட பெயரைத் தடுக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

புகாரை மறுத்திருந்தது இந்தியா! தேஜஸ் விழுந்து எரிய எண்ணெய்க் கசிவு காரணமா?

உலக அழகி ஆனார் மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ்!

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்படும்: முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு

SCROLL FOR NEXT