தற்போதைய செய்திகள்

மர்மதேசம் சீரியல் இயக்குநரின் புதிய இணையத் தொடர்!

நாளை (அக். 25) ஓடிடியில் வெளியாகிறது ஐந்தாம் வேதம் இணையத் தொடர்.

DIN

சாய் தன்ஷிகா நடித்துள்ள ஐந்தாம் வேதம் என்ற இணையத் தொடர் நாளை (அக். 25) ஓடிடியில் வெளியாகிறது.

திகில் மற்றும் மாயாஜாலத் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்தவகையில், 90களில் ஒளிபரப்பான பிரபல திகில் தொடர் மர்மதேசம். இத்தொடரை நாகா இயக்கியிருந்தார். இத்தொடரில் பிரதானப் பாத்திரத்தில் சேத்தன் மற்றும் தேவதர்ஷினி நடித்திருந்தனர்.

தொடர்ந்து, வீட்டுக்கு வீடு லூட்டி, யாமிருக்க பயமேன், ரமணி வெஸ் ரமணி உள்ளிட்ட தொடர்களை நாகா இயக்கியிருந்தார்.

இவர் தமிழ் சினிமாவில் ஆனந்தபுரத்து வீடு என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தற்போது, இவர் ஐந்தாம் வேதம் என்ற புதிய இணையத் தொடரை இயக்கிவுள்ளார்.

ஐந்தாம் வேதம் இணையத் தொடரில் சாய் தன்ஷிகா பிரதானப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராபி மீடியா ஒர்க்ஸ் தயாரித்துள்ள இந்தத் தொடரில் பொன்வண்ணன், தேவதர்ஷினி, ராம்ஜி, சந்தோஷ் பிரதாப், ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்த இணைத் தொடர் ஜீ5 தமிழ் ஓடிடி தளத்தில் நாளை(அக். 25) வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணினி/ போன் மூலமாக பணமோசடி! தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

ஒடிஸா வன்முறை: 36 மணிநேர ஊரடங்கு அமல்!

பிகார் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

ரூ.88 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

மணலி சிபிசிஎல் ஆலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை கேட்டு ஆர்ப்பாட்டம்: முன்னாள் எம்எல்ஏ உள்பட 50 பேர் கைது

SCROLL FOR NEXT