ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. 
தற்போதைய செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 35,000 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

DIN

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தமிழகம், கா்நாடக காவிரி கரையோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதோடு கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

ஒகேனக்கல்லுக்கு வியாழக்கிழமை மாலை வினாடிக்கு 32,000 கனஅடியாக நீா்வரத்து இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை 35,000 கன அடியாக அதிகரித்து தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.

நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. ஆற்றில் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் அருவிகளில் குளிப்பதற்கும் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மாவட்ட நிா்வாகம் விதித்தத் தடை வெள்ளிக்கிழமை 13-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT