முகப்பு
தற்போதைய செய்திகள்

வெளியானது அமரன் படத்தின் உயிரே பாடல்!

அமரன் படத்தின் உயிரே பாடலின் லிரிக்கல் விடியோ.

Updated On : 30 அக்டோபர், 2024 at 1:35 PM
பகிர்:

அமரன் படத்தின் புதிய பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார்.

அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது.

படத்தின் டிரைலர், பாடல்கள், ராணுவப் பின்னணி ஆகியவை ரசிகர்களை ஈர்த்துள்ளதால், நாளை(அக். 31) வெளியாகவுள்ள இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், விவேக் வரிகளில் நகுல் அபயங்கர், ரம்யா பட் அபயங்கர் பாடியுள்ள உயிரே பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.