முகப்பு
செய்திகள்

மீண்டும் ஹிட் கொடுத்த சாய் அபயங்கர்!

சாய் அபயங்கரின் புதிய ஆல்பம் கவனிக்கப்பட்டுள்ளது...

Updated On : 8 மார்ச், 2026 at 4:46 PM
பகிர்:

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் புதிய ஆல்பம் பாடல் கவனம் பெற்றுள்ளது.

தமிழில் வளர்ந்துவரும் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையில் தற்போது 6 திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில், கருப்பு திரைப்படம் ஏப்ரல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.

மேலும், இயக்குநர் அட்லி திரைப்படத்தின் இசைப்பணிகளையும் கவனித்து வருகிறார்.

Advertisement

சில நாள்களுக்கு முன் பவழ மல்லி எனப்பெயரிட்ட தன் 5-வது இசை ஆல்பத்தை வெளியிட்டார். இதில், ஜோடியாக கயாடு லோஹர் நடிக்க, ஷ்ருதி ஹாசனுடன் இணைந்து சாய் பாடியிருந்தார்.

இப்பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதுடன் 1.4 கோடி பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது. திரையிசையிலும் ஆல்பம் பாடல்களிலும் சாய் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருவது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.