ராக்கா படத்துக்கு இசையமைப்பது பற்றி சாய் அபயங்கர் கூறியதென்ன?
இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இன்ஸ்டா பதிவு குறித்து...
இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது இன்ஸ்டா பதிவில், “ராக்கா படத்துக்கு இசையமைப்பது கனவு நனவனாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துவரும் ராக்கா படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று (ஏப்.8) வெளியானது.
இயக்குநர் அட்லி நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ராக்கா என்ற திரைப்படத்தை ரூ. 600 கோடி பட்ஜெட்டில் இயக்கி வருகிறார். உலகின் முதன்மையான விஎஃப்எக்ஸ் நிறுவனங்கள் இப்படத்திற்காக பணியாற்றி வருகின்றன.
Advertisement
Advertisement
மும்பையில் செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மிருணாள் தாக்குர், ஜான்வி கபூர் நடிக்கின்றனர்.
பான் உலகத் திரைப்படமாக ஆங்கிலம், கொரிய, சீன மொழிகளிலும் வெளியாக இருக்கும் இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்தப் படம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அபயங்கர் கூறியிருப்பதாவது:
இந்த மாதிரியான அதிக பொருள்செலவில் எடுக்கப்படும் திரைப்படத்துக்கு இசையமைப்பது என்பது நம்பமுடியாத மற்றும் கனவு நனவானதுக்கு சமமானது. இந்த வாய்ப்புக்காக அட்லீ, அண்ணா, அல்லு அர்ஜுன் சார், சன்பிக்சர்ஸ் அணிக்கும் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
எல்லாம் வல்ல கடவுளின் துணையுடன் ராக்காவை ஆளும் அரசி தீபிகா படுகோன். மன்னரின் பாடலை எல்லா ஸ்ட்ரீமிங் தளத்திலும் இருக்கின்றன எனக் கூறியுள்ளார்.
Composing the music for the film Raaka is a matter of pride: Sai Abhyankkar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.