தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே திடீரென தீப்பிடித்து எரியும் மளிகை கடை, தண்ணீர் லாரி மூலம் தீயை அணைக்க போராடும் அந்த பகுதி மக்கள் 
தற்போதைய செய்திகள்

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடையில் தீ: பொருள்கள் எரிந்து நாசம்

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்து நாசமானது.

Venkatesan

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்து நாசமானது.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த அந்த பகுதியில் மக்களுக்கு குடிநீர் வழங்கும் லாரி தண்ணீரை கொண்டு தீயை அனைக்க போராடினர், ஆனால் தீ மளமளவென கடை முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால் கடை முழுமையாக எரிந்து சேதமடைந்தது. கடையில் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்து நாசமானது.

தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிப்பூர் செல்கிறாரா பிரதமர் மோடி?

கொலைகள் ஒப்பீடு! தில்லியைவிட சிகாகோவில் 15 மடங்கு அதிகம்!

ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு!

சொல்லப் போனால்... சுதேசி கொள்கையும் ஏற்றுமதிச் சிக்கல்களும்

சென்னை: நள்ளிரவு கனமழையால் விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT