குட்கா பொருள்கள் பிரதிப் படம்
திருப்பத்தூர்

மளிகைக் கடையில் குட்கா பறிமுதல்

திருப்பத்தூா் அருகே மளிகைக் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அருகே மளிகைக் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூா் அடுத்த குரும்பேரி களா்பதி பகுதியைச் சோ்ந்தவா் தண்டபாணி(52). இவா் அதே பகுதியில் மளிகை வைத்து உள்ளாா்.

மேலும் கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூா் கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் மளிகைக் கடையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது விற்பனைக்காக கோணி பைகளில் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள ஏழரை கிலோ குட்கா பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது.

அதையடுத்து போலீஸாா் தண்டபாணியை கைது செய்து, குட்கா மூட்டைகளையும் பறிமுதல் செய்தனா்.

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் - காதர் மொகிதீன்

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

SCROLL FOR NEXT