தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!
சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ. 59,640 விற்பனை.
தற்போதைய செய்திகள்தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!
சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ. 59,640 விற்பனை.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தங்கத்தின் விலை கடந்த வார இறுதியில் இருந்து தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. நேற்று (அக். 30), அதிரடியாக சவரனுக்கு ரூ. 520 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 59,520-க்கும், ஒரு கிராம் ரூ. 7,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிக்க: இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரக் கூடாது! அமெரிக்கா
தங்கம் விலை
இந்த நிலையில், சென்னையில் இன்று(அக். 31) 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 59,640-க்கும், கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ரூ. 7,455-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
சென்னையில் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 109-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,09,000-க்கு விற்பனையாகிறது.