வேலை தேடி வந்த கேரள காதல் ஜோடி ரயில் மோதி பலி!
காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னைக்கு வேலை தேடி வந்த கேரளவைச் சேர்ந்த காதல் ஜோடி ரயில் மோதி பலியாகினர்.
காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சென்னைக்கு வேலை தேடி வந்த கேரளவைச் சேர்ந்த காதல் ஜோடி ரயில் மோதி பலியாகினர்.
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் முகமது ஷரீப் (35), கோழிக்கோடை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (28). இருவரும் நேற்று இரவு 8:30 மணிக்கு கூடுவாஞ்சேரி – பொத்தேரி இடையே, பேசியபடி தண்டவாளத்தைக் கடக்க முயன்றனர்.
அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது ஷரீப், சம்பவ இடத்திலேயே பலியானார். ஐஸ்வர்யா படுகாயமடைந்தார்.
Advertisement
இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐஸ்வர்யாவை அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
மேலும், இறந்த ஐஸ்வர்யா 4 மாதம் கருவுற்று இருந்ததாக கூறப்படுகிறது.