திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் தீப்பிடித்த திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில். 
தற்போதைய செய்திகள்

பயணிகள் ரயிலில் தீ... திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு

திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் தீப்பிடித்த நிலையில் பயணிகள் வெளியேற்றப்பட்டதை அடுத்து அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

DIN

திருச்சி: திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் தீப்பிடித்த நிலையில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதை அடுத்து நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் திருவெறும்பூர் ரயில் நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சியில் இருந்து தஞ்சாவூர், திருவாரூர் வழியாக காரைக்கால் செல்லும் பயணிகள் ரயில்(0688) சனிக்கிழமை காலை 8.25 மணிக்கு புறப்பட்டு சென்றது.

பயணிகள் ரயில் 9 மணியளவில் திருவெறும்பூர் ரயில் நிலையம் வந்தபோது திடீரென ரயிலின் இன்ஜினில் இருந்து கரும்புகை வந்தது. பின்னர் அதிகமான நிலையில், பயணிகள் பெட்டிக்கு ஓடிவந்த ஓட்டுநர், ரயிலில் இருந்து பயணிகளை விரைந்து வெளியேறுமாறு சப்தம் செய்தார். இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் விரைந்து வெளியேறினர்.

பின்னர் அந்த வழியாக வந்த வேளாங்கண்ணி சிறப்பு ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

பயணிகள் ரயிலின் இன்ஜின் பெட்டியில் தீ விபத்து குறித்து ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்றபோது தீ விபத்து நிகழ்ந்ததால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதை அடுத்து நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீ தடுப்பு விதிகளைப் பின்பற்றுவோம்!

பள்ளிக் கட்டட பரப்பளவுக்கு ஏற்ப வகுப்புப் பிரிவுகளின் எண்ணிக்கை - சிபிஎஸ்இ விதிகளில் திருத்தம்

சாதி மறுப்பு திருமணங்களில் காவல் துறை கட்டப்பஞ்சாயத்து -தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

காலம் வழங்கிய கொடை!

தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோராவுக்கு பிரியாவிடை அணிவகுப்பு: எஸ்.பி.கே.சிங்கிற்கு கூடுதல் பொறுப்பு

SCROLL FOR NEXT