FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

சிகாகோவில் தமிழ் மக்களுடன் முதல்வர் ஸ்டாலின்!

வட அமெரிக்க தமிழ்ச்சங்கத்தில் தமிழ் மக்களுடன் முதல்வர் ஸ்டாலின்.

Updated On : 8 செப்டம்பர் 2024, 9:07 am IST
சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின். - படம்: எக்ஸ்
பகிர்:

சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலை விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.

தமிழகத்தில் தொழில் துறைக்கான முதலீடுகளை ஈா்க்கும் நோக்கில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர், தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுளை ஈா்த்துவிட்டு செப். 14-ஆம் தேதி திரும்பி வரும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

முதலீடுகளை ஈா்க்க, ஏற்கெனவே ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூா், ஜப்பான், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு சென்ற அவர், தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் சிகாகோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க கலை விழாவில் பங்கேற்றுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்!” என்று குறிப்பிட்டு புதிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments