முகப்பு
தற்போதைய செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் பணியிடை நீக்கம்

நெல்லையில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளிடம் பாலியல் ரீதியிலான சீண்டல்களில் ஈடுபட்டதாக ஆசிரியர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 8:29 AM
பகிர்:

நெல்லையில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளிடம் பாலியல் ரீதியிலான சீண்டல்களில் ஈடுபட்டதாக ஆசிரியர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நெல்லையில் பல ஆண்டுகள் பெருமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்றாக தனியாருக்கு சொந்தமான மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் ஏழாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் ரீதியிலான சீண்டல்கள் அளித்து வருவதாக கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளது.

இதையடுத்து அங்கு பணிபுரிந்து வந்த தற்காலிக ஆசிரியர் ராபர்ட் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மற்றொரு நிரந்தர ஆசிரியரான நெல்சனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அந்த ஆசிரியர்களிடம் துறைரீதியாக விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமாரிடம் கேட்டபோது, பாலியல் ரீதியிலான சீண்டல்கள் குறித்து புகார்கள் வந்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் தற்போது போலீசார் மற்றும் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →