தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்வதற்காக, ஹெலிகாப்டர் மூலம் கும்பகோணம் வந்தடைந்த மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி  
தற்போதைய செய்திகள்

கும்பகோணத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் ஆய்வு: ஹெலிகாப்டரில் வந்திறங்கிய நிதின்கட்கரி

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்வதற்காக, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி ஹெலிகாப்டர் மூலம் கும்பகோணம் வந்தடைந்தார்.

DIN

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்வதற்காக, மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி ஹெலிகாப்டர் மூலம் கும்பகோணம் வந்தடைந்தார். அவருடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வந்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளை ஆய்வு செய்ய கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி மைதானத்தில் உள்ள ஹெலிபேடு தளத்தில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வந்து இறங்கினார்.

தொடர்ந்து தஞ்சாவூரில் இருந்து சென்னை செல்லும் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

காவலர் அரசு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட நிதின் கட்கரி

இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், கும்பகோணம் திமுக மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கல்யாணசுந்தரம் , மக்களவை உறுப்பினர் சுதா, கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் க.அன்பழகன், துணை மேயர் தமிழ்அழகன், பாஜக மாநிலச் செயலர் கருப்பு முருகானந்தம், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து காவலர் அரசு அணிவகுப்பு மரியாதை ஏற்று அங்கிருந்து காரில் ஏறி நாதன் கோயிலில் உள்ள ஜெகநாத பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே ஊழியா் வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு

அணு ஆயு​தம் என்​னும் அச்​சு​றுத்​தல்

இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக தொடா் மழை

ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்

SCROLL FOR NEXT