புது தில்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சீதாராம் யெச்சூரி உடலுக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி திருவுடலுக்கு சனிக்கிழமை (செப்.14) மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மேலும், சீதாராம் யெச்சூரி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இன்று காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கான், ராஜீவ் சுக்லா உள்ளிட்ட பல தலைவர்கள், சீதாராம் யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.