மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் படம் | ஏபி
தற்போதைய செய்திகள்

மெக்சிகோவில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி!

மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியாகினர்.

DIN

மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவு

மெக்சிகோ நகரின் வடமேற்கே உள்ள நௌகல்பானில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவினால் வீடு மற்றும் பள்ளிக்கூடம் பாதிக்கப்பட்டுள்ளதாக மெக்சிகோ அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: மோடியை சந்திக்கிறார் டிரம்ப்!

6 பேர் பலி

4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உள்பட 6 பேர் பலியான நிலையில் காயமடைந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக மீட்புக் குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் பணிப் படைகளை அனுப்புமாறு மாநில ஆளுநர் டெல்ஃபினா கோம்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: டிரம்புடன் தொலைபேசியில் பேசிய கமலா ஹாரிஸ்!

மெக்சிகோவுக்கு மேற்கே உள்ள ஜிலோட்ஸிங்கோவில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவில் 3 மாத குழந்தை உள்பட 9 பேர் பலியாகினர்.

இந்த நிலையில் 2 நாள்களுக்கு பின்னர் நௌகல்பானில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 10 மற்றும் 12 வயதுடைய இரண்டு குழந்தைகளும், 34 வயதுடைய பெண் ஒருவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்புப்பணி

நிலச்சரிவில் சிக்கி பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், நிலச்சரிவு ஏற்படும் என்ற அச்சத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஜூலை மாத இறுதியில் மழைக்காலம் தொடங்கியதில் இருந்து மெக்சிகோ மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT