திருமலை ஏழுமலையானின் லட்டு பிரசாதம். Din
தற்போதைய செய்திகள்

திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு: ஆய்வில் உறுதி!

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்துள்ளது குறித்து...

DIN

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டு இருப்பது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டிருந்தார்.

திருமலை ஏழுமலையான்கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாகவும், கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்றும் நாரா லோகேஷும் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்து இருந்தார்.

அவர், “திருமலை பிரசாத விவகாரத்தில், பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் நான் மற்றும் எனது குடும்பம் அந்த கடவுள் மீது சத்தியம் செய்கிறோம். அதேபோல், சந்திரபாபுவும், அவரது குடும்பமும் சத்தியம் செய்யத் தயாரா?” என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆய்வில் உறுதி

ஒய்.எஸ்.ஆர். ஆட்சியின்போது திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருள்கள் சேர்க்கப்பட்டிருப்பது கால்நடைகள் மற்றும் உணவு பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையம் ஜூலை மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கை மூலமாகவும், குஜராத் தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின் மூலமாகவும் தெரியவந்துள்ளது.

திருப்பதி லட்டில் சேர்க்கப்பட்டுள்ள நெய்யில், மாட்டிறைச்சியின் கொழுப்பு, பன்றிக்கொழுப்பு, மீன் எண்ணெய், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்டவற்றின் கொழுப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT