மூன்று முடிச்சு தொடரின் காட்சி. 
தற்போதைய செய்திகள்

புதிய தொடருக்கு பெருகும் வரவேற்பு: இந்த வார டிஆர்பி!

இந்த வார டிஆர்பி பட்டியலில் முதல் 5 இடங்களைப் பிடித்த தொடர்கள் குறித்து...

DIN

இந்த வாரம் எந்தெந்த தொடர்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளது என்பதைக் காணலாம்.

தற்போது உள்ள சூழலில் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளம் வயதினரும் தொடர்களைப் பார்க்கின்றனர். இளம் தலைமுறையினர், அலுவலகம் செல்வோர் தொடர்களை ஓடிடித் தளங்களில் விருப்ப நேரங்களில் பார்க்கின்றனர்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களைப் பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மக்கள் மத்தியில் அதிகம் விரும்பி பார்க்கும் தொடர்களை டிஆர்பி பட்டியல் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த தொடர்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளது என்பதைக் காணலாம்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் 8.83 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சிங்கப் பெண்ணே தொடர் 8.49 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று, இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர், இந்த வாரம் 8.22 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது.

தொடங்கி சில வாரங்களேயான மூன்று முடிச்சு தொடர் 8.11 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.

மருமகள் தொடர் இந்த வாரம் 7.77 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது.

சென்ற வாரம் முதல் 5 இடங்களைப் பிடித்த தொடர்களே, இந்த வாரமும் முதல் 5 இடங்களில் அதே வரிசையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT