மீண்டும் டிஆர்பியில் முந்தும் எதிர்நீச்சல் -2 தொடர்!
எதிர்நீச்சல் -2 தொடர் மீண்டும் டிஆர்பி புள்ளிப் பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.
எதிர்நீச்சல் -2 தொடர் மீண்டும் டிஆர்பி புள்ளிப் பட்டியலில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.
கேப்ரியலா நாயகியாக நடித்துவரும் மருமகள் தொடரை பின்னுக்குத்தள்ளி எதிர்நீச்சல் - 2 முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் பெரும்பாலான இல்லத்தரசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. ஒருசில தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரைக் கவரும் வகையிலும் எடுக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அந்தவகையில் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்த எதிர்நீச்சல் -2 தொடர் சமீபகாலமாக டிஆர்பி புள்ளிப் பட்டியலில் சரிவைச் சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் புள்ளிப் பட்டியலில் முன்னேறி வருகிறது.
வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு எதிர்நீச்சல் - 2 தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நடிகை பார்வதி, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிபிரியா இசை உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
டிஆர்பிக்காக புதிய பாத்திரங்களை எதிர்நீச்சல் - 2 தொடர் அறிமுகம் செய்து வந்தாலும், கதையின் விறுவிறுப்பு குறையாமல் இருப்பதால், தொடர்ந்து மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்தத் தொடர் டிஆர்பி புள்ளிப் பட்டியலில் இந்த வாரம் 8.03 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
பல வாரங்களாக முன்னணியில் இருந்த மருமகள் தொடர் 7.98 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு மருமகள் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் கேப்ரியலா நாயகியாகவும் ராகுல் ரவி நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.
Sun tv Ethirneechal serial is back in the top TRP charts
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.