தற்போதைய செய்திகள்

ஓடிடியில் கொட்டுக்காளி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

DIN

திரையரங்குகளில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் உள்ளதுபோல, ஓடிடியில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

நடிகர் சூரி நாயகனாக நடித்து வெளியான கொட்டுக்காளி திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை(செப். 27) வெளியாகிறது. கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். நாயகியாக அன்னா பென் நடித்துள்ளார்.

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான டிமாண்டி காலனி படத்தின் 2-ம் பாகம், ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை(செப். 27) பார்க்கலாம்.

நடிகர் நானி நடிப்பில் வெளியான சரிபோதா சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடியில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் தற்போது காணக்கிடைக்கிறது.

நடிகை இனியா நடிப்பில் வெளியான திரில்லர் திரைப்படமான காஃபி, ஆஹா தமிழ் ஓடிடியில் நாளை(செப். 27) வெளியாகிறது.

சைத்ரா, சுரேஷ் அங்காலி, ரவி அனேகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பிளிக் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் தற்போது காணலாம்.

இதைத்தவிர உலகளவில் வெற்றிப் பெற்ற படமான ஸ்ட்ரீ - 2, அமேசான் பிரைம் ஓடிடியில் நாளை(செப். 27) வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முன்னாள் போட்டியாளர்கள்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

SCROLL FOR NEXT