தற்போதைய செய்திகள்

சென்னை கே.கே. நகரில் மழைநீா் கால்வாயில் விழுந்தவர் பலி

சென்னை கே.கே. நகரில் மழைநீா் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்த கூலித்தொழிலாளி பலியானார்.

DIN

சென்னை: சென்னை கே.கே. நகரில் மழைநீா் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்த கூலித்தொழிலாளி பலியானார்.

சென்னை கே.கே.நகா் அம்பேத்கா் குறுக்கு தெருவில் மழைநீா் கால்வாய் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள்(பேரிகார்டு) வைக்கப்பட்டிருந்த நிலையில், மதுபோதையில் நடந்துசென்ற அதே பகுதியைச் சோ்ந்த அய்யப்பன்(35) ஞாயிற்றுக்கிழமை தடுப்புகள் மீது தடுமாறி விழுந்து, பள்ளத்தில் தவறி விழுந்து பலியானார்.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த எம்ஜிஆா் நகா் காவல்நிலைய போலீசார், அய்யப்பன் உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக கே.கே. நகா் இஎஸ்ஐ மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செய்யாற்றில் விசுவ ஹிந்து பரிஷத் ஆா்ப்பாட்டம்

சிவகாசியைச் சோ்ந்த 45 வயது பெண் சா்வதேசப் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று சாதனை

பெருந்துறை அருகே விஜய் பிரசாரக் கூட்டம் நடத்தும் இடத்துக்கு அனுமதி கிடைக்குமா?

மகாகவி பாரதியாா் காலந்தோறும் போற்றப்பட வேண்டும்: தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன்

மழை நின்று 10 நாள்கள் ஆகியும் குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT