கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

3 மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்! ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்பு!

3 மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் குறித்து...

DIN

3 முக்கிய மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்றுள்ளது.

மத்திய ஆசியாவைச் சேர்ந்த தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள், தங்களது மூன்று நாட்டு எல்லைகள் சந்திக்கும் புள்ளியை நிறுவதற்காகவும், அவர்களுக்கு இடையில் நட்புறவு நிலவவும் குஜ்ஜாந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்நிலையில், இந்த திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து, அந்நாட்டு அமைச்சர் அஹமது பின் அலி அல் அயிக் கூறுகையில், இந்த ஒப்பந்தமானது மத்திய ஆசியப் பகுதியில் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தி சர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்டும் என அமீரகம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் அமீரகத்துக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க நட்புறவைக் குறிப்பிட்டு அவர்களது வளர்ச்சிக்கும் அமைதிக்கும் ஐக்கிய அரபு அமீரகம் என்றுமே துணை நிற்கும் என உறுதியளித்துள்ளார்.

மேலும், சர்வதேச நாடுகளுக்கு இடையிலான நெருக்கடிகள் மற்றும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்த வழி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பாகிஸ்தான் அதிபருக்கு கரோனா தொற்று பாதிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT