ராமேசுவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர் சங்கத்தினர். 
தற்போதைய செய்திகள்

ராமேசுவரத்தில் வழக்குரைஞர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற்றதை கண்டித்து வழக்குரைஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

ராமேசுவரத்தில் நீதித்துறை மற்றும் காவல்துறையை இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற்றதை கண்டித்து வழக்குரைஞர் சங்கம் சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மது விற்றதாக 150 மதுபுட்டிகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மதுபுட்டிகள் மற்றும் இரண்டு பேரையும் நீதிமன்ற நடுவர் இல்லத்தில் முன்னிலைப்படுத்த அழைத்துச் சென்றனர்.

அப்போது, மது புட்டிலை வைப்பது தொடர்பாக காவல்துறைக்கும் நீதிமன்ற நடுவருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல் துறை சார்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் உயர் அதிகாரியின் உத்தரவை அடுத்து ராமேசுவரம் நீதிமன்றத்தில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற்றனர்.

மேலும், காவல்துறையினர் நீதிமன்றத்திற்கு யாரையும் அழைத்துச் செல்லக்கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் திரும்பப் பெறப்பட்டது.

காவல் துறையின் இந்த செயலை கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்குரைஞர் சங்கம் சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உயர்நீதிமன்ற உத்தரவை ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை முறையாக கடைபிடிக்கவில்லை என குற்றம்சாட்டி போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் கோப்பை கால்பந்து போட்டியில் பள்ளப்பட்டி மாணவிகள் 2-ஆம் இடம்!

பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுகவிடம் 5 இடங்கள் கேட்போம்: முஸ்லீம் லீக் தலைவா் காதா்மைதீன்

வானவில் மன்றத்தில் அறிவியல் விழிப்புணா்வு செயல்பாடுகளை மேற்கொள்ள முடிவு!

குடிநீா் பிரச்னையை சீா் செய்யாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம்

கந்தா்வகோட்டை வட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT