சென்னை உயர் நீதிமன்றத்தில் தணிக்கை வாரியத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை ஜன நாயகன் படக்குழு திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை உயா் நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வுக் குழு பாா்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்கவும் உத்தரவிட்டாா். தனிநீதிபதியின் உத்தரவை எதிா்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமா்வு ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கும் தனிநீதிபதியின் உத்தரவை நேற்று ரத்து செய்தனர்.
மேலும், தணிக்கை வாரியம் பதிலளிக்க உரிய காலஅவகாசம் அளித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று தனிநீதிபதி பி.டி.ஆஷாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தணிக்கை வாரியத்துக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றுவிட்டு, மறுஆய்வுக் குழுவை அணுக படத்தின் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வழக்கை திரும்பப் பெறுவதா? அல்லது தனி நீதிபதி விசாரணையை தொடரலாமா? என்பது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்று இறுதி முடிவெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.