வஃக்பு வாரிய சட்ட மசோதாவை திரும்ப பெறக் கோரி திருவள்ளூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர்.  
தற்போதைய செய்திகள்

திருவள்ளூரில் தவெக ஆர்ப்பாட்டம்!

வஃக்பு வாரிய சட்ட மசோதாவை திரும்ப பெறக் கோரி திருவள்ளூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

திருவள்ளூர்: வஃக்பு வாரிய சட்ட மசோதாவை திரும்ப பெறக் கோரி திருவள்ளூரில் தமிழக வெற்றிக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் சமூக-மத ரீதியிலான பணிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்படும் வக்ஃப் சொத்துகளின் நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் நோக்கில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு திருத்தங்களுடன் மீண்டும் இரு அவைகளிலும் தாக்கல் செய்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

இந்த நிலையில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் திருவள்ளூர் ரயில் நிலையம் முன்பு தமிழக வெற்றிக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குட்டி தலைமை வகித்தார். அப்போது மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வஃக்பு வாரிய சட்ட மசோதாவை உடனே திரும்ப பெற வேண்டும். மேலும் முஸ்லீம்கள் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை வன்மையாக கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னாம்பள்ளியில் குடிநீா் குழாய் பணியின்போது அம்மன் சிலை கண்டெடுப்பு

பரமத்தி பேரூராட்சியில் 32 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

‘வாசன் கண் மருத்துவமனையில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறலாம்’

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

சேலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணா்கள் சோதனை

SCROLL FOR NEXT