பிலிப்பின்ஸ் பாதுகாப்புக்கு அதிநவீன டிரோன்களை ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது. எக்ஸ்
தற்போதைய செய்திகள்

பிலிப்பின்ஸின் பாதுகாப்புக்கு டிரோன்களை வழங்கிய ஆஸ்திரேலியா!

பிலிப்பின்ஸ் கடற்படைக்கு ஆஸ்திரேலியா டிரோன்கள் வழங்கியதைப் பற்றி...

DIN

பிலிப்பின்ஸ் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த ஆஸ்திரேலியா அரசு டிரோன்களை வழங்கியுள்ளது.

தெற்கு சீனா கடல் பகுதியில் பிலிப்பின்ஸ் நாட்டின் கடல் எல்லைக்குள் சீன கப்பல்கள் அத்துமீறுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இதனால், பிலிப்பின்ஸ் நாட்டின் கடல் பகுதியின் பாதுகாப்பை அதிகரிக்க ஆஸ்திரேலியா அரசு 20 அதிநவீன டிரோன்களை வழங்கியுள்ளது.

பிலிப்பின்ஸின் பட்டான் மாகாணத்தில் கடந்த ஏப்.8 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய நாட்டு தூதர் ஹே கியோங் யூ சுமார் 5,92,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான டிரோன்களை பிலிப்பின்ஸின் கடல் பாதுகாப்புக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மேலும், பிலிப்பின்ஸ் கடற்படையைச் சேர்ந்த 30 வீரர்களுக்கு அந்த டிரோன்களை இயக்குவது குறித்து ஆஸ்திரேலியா சார்பில் 4 நாள்கள் பயிற்சியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன டிரோன்களின் மூலம் பிலிப்பைன்ஸின் மேற்கு கடல் பகுதிகளில் மிகப் பெரியளவிலான கண்காணிப்புகள் மேற்கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு சீனாவுடன் நிலம் சார்ந்த பிரச்னைகள் இல்லாத போதிலும் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தோ-பசிஃபிக் பகுதிகளில் ஆஸ்திரேலியாவின் வான்வழி மற்றும் கடல்வழி செயல்பாடுகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:அலுவலகங்களில் இளம் தலைமுறையினரிடம் ஜாக்கிரதை! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஜராத் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு: ஒருவர் பலி; 12 பேருக்கு தீவிர சிகிச்சை

ஆசிய கோப்பை: பவர் பிளே ஓவர்களுக்குள் வெற்றி இலக்கை எட்டி இந்திய அணி அபாரம்!

பயணங்கள் முடிவதில்லை, இறந்த பின்னும்!

சக்தி திருமகன் டிரெய்லர்!

காரிருள் நடுவில்... சாதிகா!

SCROLL FOR NEXT