தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேனகாவிடம் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்ட தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய இயக்குநர் ரவிவர்மா. 
தற்போதைய செய்திகள்

பெண் தற்கொலை சம்பவம்: எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் விசாரணை

தஞ்சாவூர் அருகே காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய இயக்குநர் தலைமையிலான குழுவினர் நேரில் வியாழக்கிழமை விசாரணை

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய இயக்குநர் தலைமையிலான குழுவினர் நேரில் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரசமரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் அய்யா தினேஷ் (32). இவர் மீது பொய் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டதாகக் கூறி, அய்யா தினேஷின் தங்கைகளான மேனகா (31), கீர்த்திகா (29) காவல் நிலையம் முன் ஏப்ரல் 8 ஆம் தேதி களைக்கொல்லி மருந்தைக் குடித்தனர்.

இதையடுத்து, இருவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பொறியியல் பட்டதாரியான கீர்த்திகா ஏப்ரல் 9 ஆம் தேதி உயிரிழந்தார். மேனகா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் சர்மிளா ஏப்ரல் 11 ஆம் தேதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர் ஆகியோர் 16 ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தவிர தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் மாற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, ஆய்வாளர் சர்மிளா உள்பட 4 காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீர்த்திகாவின் உடலை வாங்க மறுத்து நடுக்காவேரி அரசமரத் தெருவில் தொடர்ந்து 8 ஆவது நாளாக வியாழக்கிழமையும் உறவினர்கள் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய இயக்குநர் ரவிவர்மா தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமை நடுக்காவேரிக்குச் சென்று கீர்த்திகாவின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேனகாவிடமும் விசாரித்தனர். இதுதொடர்பான அறிக்கையைத் தலைமையிடத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றார் ரவிவர்மா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுடன் ஆப்கன் சதித் திட்டம்! பாக். அமைச்சர் குற்றச்சாட்டு

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு

தில்லியில் போலி பற்பசை தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிப்பு: இருவா் கைது

போா்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் பணி: அதிமுகவுக்கு அமைச்சா் சக்கரபாணி பதில்

மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு - அக். 22-இல் குடியரசுத் தலைவா் தரிசனம்

SCROLL FOR NEXT