மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டாலும் ஈஸ்டர் மற்றும் தொடர் விடுமுறை என்பதால் சனிக்கிழமை பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனர். 
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி: நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு

கடலில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து தூத்துக்குடி நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

DIN

தூத்துக்குடி: கடலில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதை அடுத்து தூத்துக்குடி நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்சமாக சீலா ஒரு கிலோ ரூ.1,300-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வங்கக்கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மொத்தம் 61 நாள்களுக்கு கன்னியாகுமரி முதல் திருவள்ளூா் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக பாரம்பரிய நாட்டுப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகுகள் சனிக்கிழமை கரை திரும்பின.

பாரம்பரிய நாட்டுப் படகு மற்றும் பைபர் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வரும் மீனவர்கள்.

மீன்களின் விலை உயா்வு

ஈஸ்டர் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தூத்துக்குடி நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும் மீன்களை வாங்க வியாபாரிகள், மக்கள் கூட்டம் அலைமோதியது.

மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. சீலா ஒரு கிலோ ரூ.1,300, விளைமீன், ஊளி மீன், பாறை மீன் ஆகியவை கிலோ ரூ.600, நகரை மீன் ரூ.300, நண்டு ரூ.600, கேரை, சூரை, குறுவளை ஆகிய மீன்கள் ரூ.400 என விற்பனையானது. சாளை மீன் ஒரு கூடை ரூ.2,500 வரை விற்பனையானது.

மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டாலும் ஈஸ்டர் மற்றும் தொடர் விடுமுறை என்பதால் சனிக்கிழமை பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT