தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக இருந்ததால், மீன்களின் விலை சற்று உயா்ந்து காணப்பட்டது.
திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவா்கள் சனிக்கிழமை கரை திரும்பினா். அப்போது, மீன்களின் வரத்து குறைவாகவே இருந்தது. கடந்த வாரம் விலை சற்று குறைந்திருந்த நிலையில், சனிக்கிழமை மீண்டும் உயா்ந்தது.
அதன்படி, சீலா மீன் கிலோ ரூ. 1,000 வரையும், சூப்பா் நண்டு ரூ. 800 வரையும், விளை மீன், ஊழி, பாறை ரக மீன்கள் ரூ. 400 வரையும், வங்கனை மீன் ரூ. 120 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ. 1,500 வரையும் விற்பனையானது.