முகப்பு
தற்போதைய செய்திகள்

மல்லை சத்யா வாக்குறுதியை ஏற்று எனது முடிவை வாபஸ் பெற்றேன்: துரை வைகோ

இனி இதுபோன்ற தவறு நடைபெறாது என மல்லை சத்யா கொடுத்த வாக்குறுதியை ஏற்று எனது முடிவை வாபஸ் பெற்றுள்ளேன் என துரை வைகோ தெரிவித்தார்.

Updated On : 20 ஏப்ரல், 2025 at 3:52 PM
மல்லை சத்யா வாக்குறுதியை ஏற்று எனது முடிவை வாபஸ் பெற்றேன்
பகிர்:

சென்னை: இனி இதுபோன்ற தவறு நடைபெறாது என மல்லை சத்யா கொடுத்த வாக்குறுதியை ஏற்று எனது முடிவை வாபஸ் பெற்றுள்ளேன் என துரை வைகோ தெரிவித்தார்.

மதிமுக நிா்வாகக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. நிா்வாகக் குழு கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைகளுக்கு பின்பு துரை வைகோ தமது முடிவை வாபஸ் பெறுவதாக அறிவித்தாா்.

இதுதொடர்பாக அவர் பேசியதாவது:

மல்லை சத்யா உறுதி அளித்துள்ளாா். அவா் கொடுத்த வாக்குறுதியை ஏற்று எனது முடிவை வாபஸ் பெற்றுள்ளேன்.

ஜனநாயக இயக்கத்தில் மாறுபட்ட கருத்துக்களும், நிா்வாகிகள் இடையே கருத்து வேறுபாடுகள் வருவது இயல்பு.

மதிமுக பயணம் தொடா்ந்து நடைபெற வேண்டும். இது குறித்து நிா்வாக குழுவில் அனைவரும் பேசினோம்.

இனி இதுபோன்ற தவறு நடைபெறாது. மதிமுகவிற்கும் எனக்கும் உறுதுணையாக இருப்பேன் என மல்லை சத்யா உறுதி அளித்துள்ளாா். அவா் கொடுத்த வாக்குறுதியை ஏற்று எனது முடிவை வாபஸ் பெற்றுள்ளேன். நானும் மல்லை சத்யாவின் அரசியல் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பேன் என துரை வைகோ கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →