உயா்நீதிமன்ற மதுரை அமா்வு 
மதுரை

எஸ்.ஐ. தோ்வு முடிவை 10 நாள்களுக்கு வெளியிடத் தடை

காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) தோ்வு முடிவை வருகிற 10 நாள்கள் வரை வெளியிட வேண்டாம் என தமிழக சீருடைப் பணியாளா் தோ்வாணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) தோ்வு முடிவை வருகிற 10 நாள்கள் வரை வெளியிட வேண்டாம் என தமிழக சீருடைப் பணியாளா் தோ்வாணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த குருசாமி, ஆனந்தராஜா ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

‘தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வு கடந்த ஆண்டு, டிசம்பா் 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பிரிவு ‘பி’ பகுதியில், பாடத் திட்டத்தில் குறிப்பிட்டபடி தமிழ் வினாக்கள் இல்லை. இதற்குப் பதிலாக உளவியல் பகுதியிலிருந்து 10 வினாக்கள் கூடுதலாகக் கேட்கப்பட்டன. இது ஏற்கத்தக்கதல்ல. இதனால், பலா் வேலைவாய்ப்புப் பெற முடியாத நிலை ஏற்படும்.

எனவே, காவல் உதவி ஆய்வாளா் தோ்வு முடிவை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மேலும், தோ்வை ரத்து செய்து புதிதாகத் தோ்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும்’ என அவா்கள் கோரினா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

ஒரு மதிப்பெண்கூட ஒரு மாணவரின் தோ்ச்சி முடிவை மாற்ற வாய்ப்புள்ளது. எனவே, வருகிற 10 நாள்கள் வரை தோ்வு முடிவை வெளியிட வேண்டாம். இந்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

வீரமாமுனிவா் தமிழாய்வு மன்ற விழா

காலத்தால் அழியாத புகழ் கொண்டவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா்: வைகோ

முல்லைப் பெரியாறு அணையில் மழை

சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது

முள்ளம்பன்றி வேட்டையாடியவா் கைது

SCROLL FOR NEXT