கோப்புப்படம்  
தற்போதைய செய்திகள்

போலி சான்றிதழ்கள் கொடுத்து சிஐஎஸ்எப் படையில் சேர முயற்சி: 8 பேர் மீது போலீசில் புகார்

போலி சான்றிதழ்கள் கொடுத்து சிஐஎஸ்எப் துணை ராணுவப்படையில் சேர முயற்சி செய்ததாக அஸ்ஸாமைச் சேர்ந்த இரு பெண்கள் உள்பட 8 பேர் மீது காவல்துறையில் புகார்

DIN

அரக்கோணம்: போலி சான்றிதழ்கள் கொடுத்து சிஐஎஸ்எப் துணை ராணுவப்படையில் சேர முயற்சி செய்ததாக அஸ்ஸாமைச் சேர்ந்த இரு பெண்கள் உள்பட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தக்கோலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே உள்ள நகரி குப்பத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையம் உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் துணை ராணுவப்படையான மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் சேர தேர்வு செய்யப்படும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என இருபாலருக்கும் இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகின்றன.

இந்த படையில் சேர கடந்த மார்ச் மாதம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஆண்,பெண் படைவீரர்கள் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அரக்கோணத்தை அடுத்த நகரி குப்பத்தில் உள்ள மண்டல பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கும் வகுப்பு தொடங்கப்பட உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்போது மையத்திற்கு வரத் தொடங்கி உள்ளனர். இவர்களது சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெற்ற உடன் உண்மைத்தன்மை சோதனைக்காக அந்தந்த மாநில அரசுகளுக்கு அனுப்பப்படுகிறது. அந்த முடிவுகள் வரும் வரை பயிற்சியில் சேர வருவோர் மையத்திலேயே தங்க வைக்கப்படுகின்றனர்.

இதுபோன்று அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட சில்சார் மாவட்டத்தை சேர்ந்த கே.எம்.நிஷா, கடாரியா ருஜிதா தேவி ஆகிய இரு பெண்கள், அஜய் யாதவ், முகேஷ் மவுரியா, சந்திரிகா சிங், அமித் குமார், எம்.டி,தன்வீர், நரேந்திர சிங் ஆகிய எட்டு பேருடைய சான்றிதழ்களின் உண்மை தன்மை அறிய அசாம் மாநிலம் சின்சார் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் அந்த எட்டு பேரின் சான்றிதழ்களும் போலி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த எட்டு பேர் மீதும் பயிற்சி மைய ஆய்வாளர் ராஜேஷ் தக்கோலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகார் குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம்! காரணம் என்ன? பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

SCROLL FOR NEXT