தற்போதைய செய்திகள்

அதிமுக கூட்டத்தில் செங்கோட்டையன்! முதல் வரிசையில்..!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல் வரிசையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

DIN

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இதையடுத்து தேர்தலுக்கு தயார்படுத்துதல், பூத் கமிட்டி கட்டமைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு முதல்முறையாக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு முதல் வரிசையில் இடம் தரப்பட்டுள்ளது.

சமீபமாக எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வந்த நிலையில், நேற்றுமுன்தினம் சட்டப்பேரவையில் பேசிய செங்கோட்டையன், 'எடப்படியாரை வணங்கி...' என்று தொடங்கிப் பேசினார். இதையடுத்து இருவருக்குள்ளும் சமாதானம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் அதற்கு முந்தைய நாள் அதிமுக விருந்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

தொடர்ந்து இன்று அதிமுக கூட்டத்தில் பங்கேற்றுள்ள செங்கோட்டையன், இபிஎஸ்ஸுக்கு எதிர் வரிசையில் முதலாவதாக அமர்ந்திருக்கிறார். கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, உதயகுமார், வேலுமணி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பதவி காத்திருக்கு இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

செப்.12, 19-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்

ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

சீருடைப் பணிகள் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கோரி வடமாநில தொழிலாளா்கள் போராட்டம்: கற்களை வீசி தாக்கியதால் விரட்டி அடித்த போலீஸாா்

SCROLL FOR NEXT