ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சூறைக்காற்றுடன் பெய்துவரும் கனமழை. 
தற்போதைய செய்திகள்

ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்து வருகிறது,

DIN

சேலம்: ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கனமழை பெய்து வருகிறது, இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை நரசிங்கபுரம், செல்லியம்பாளையம்,கல்பகனூர் கொத்தம்பாடி ராமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இல.கணேசன் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல்

சீனாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை!

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

SCROLL FOR NEXT