ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஏலேல சிங்க விநாயகர் 
தற்போதைய செய்திகள்

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

காஞ்சிபுரம் காமட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் புதன்கிழமை ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

காஞ்சிபுரம்: விநாயகர் சதுர்த்தி திருநாளையொட்டி, காஞ்சிபுரம் காமட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் புதன்கிழமை ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆண்டுதோறும் வரும் விநாயகா் சதுா்த்தி நாளன்று காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகா் கோயிலில் உள்ள மூலவருக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்படுவது வழக்கம். நிகழாண்டு விநாயகா் சதுா்த்தியையொட்டி ஆலயத்தில் கணபதி ஹோமமும், அதனையடுத்து சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றன. பின்னர் ரூ.15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஏற்பாடுளை ஆலய நிர்வாகக்குழுவின் தலைவர் சி.குப்புச்சாமி, செயலாளர் டி.ஜெகன்னாதன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

இது குறித்து ஆலய நிர்வாகக்குழுவின் தலைவர் குப்புச்சாமி கூறுகையில், ஆண்டு தோறும் பக்தர்களிடம் மடிப்பு கலையாத புது ரூபாய் நோட்டுகளான 5,10, 20, 50,100, 500 ஆகியவற்றை லட்சக் கணக்கில் பெற்று அதனை விநாயகருக்கு அலங்கரித்து தீபாராதனைகள் நடத்துவோம். யார், யாரிடம் எவ்வளவு பெறப்பட்டது என்பதை கணக்கு வைத்துக் கொண்டு அத்தொகையை விநாயகர் சதுர்த்தி விழா முடிந்தவுடன் அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுகிறோம். இந்த ஆண்டு அலங்காரத்துக்காக பக்தர்கள் வழங்கிய மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பில் விநாயகர் அலங்கரிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Elela Sinha Vinayagar was adorned with Rs. 15 lakh worth of rupee notes and bestowed blessings on devotees on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிமாசலில் தொடரும் கனமழை: கடந்த 3 நாள்களில் அரசுக்கு ரூ.500 கோடிக்கும் மேல் இழப்பு!

மறுவெளியீடாகும் ரன்!

சிரியா தலைநகரில்... இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் 6 வீரர்கள் பலி!

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

SCROLL FOR NEXT