சந்தியாவின் உடலுக்கு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவத் கல்லூரி முதல்வர் அமுதாராணி மற்றும் அனைத்துத் துறை மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் என அனைவரும் மரியாதை செலுத்தினர். 
தற்போதைய செய்திகள்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

கமுதி அருகே சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

கமுதி அருகே சாலை விபத்தில் முளைச்சாவு அடைந்த இளம் பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவரது பூத உடலுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா கொல்லங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார், இவரது மனைவி சந்தியா(27). இவர் கடந்த 27 ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி தலையில் படுகாயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பேரையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தலையில் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் பலத்த காயம் ஏற்பட்டதில் அதிகளவில் ரத்தம் படிந்துதுள்ளதை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மூளையின் முழு செயல்பாட்டை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதையடுத்து உறவினர்களிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசு வழிகாட்டுதல் படி உடல் உறுப்பு தானம் செய்வதால் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என உறவினர்களிடம் மருத்துவ அதிகாரிகள் எடுத்துக் கூறினார்.

இதனைத் தொடரந்து உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முன்வந்தனர்.

இதனையடுத்து, சனிக்கிழமை காலை சந்தியாவின் இதயம், இரண்டு நுரையீரல்கள், சிறுநீரகங்கள், இரண்டு கண்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு சென்னைக்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. மருத்துவ பிரிவில் உடல் உறுப்புக்காக காத்திருக்கும் 6 பேருக்கு உடல் உறுப்புகள் பொருத்தப்பட உள்ளது.

தொடர்ந்து, சந்தியாவின் உடலுக்கு மருத்துவமனை வளாகத்தில் அரசு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மருத்துவத் கல்லூரி முதல்வர் அமுதாராணி மலர் வளையம் மற்றும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், மயக்கவியல் பிரிவு இணை பேராசிரியர் சுகுமார் மற்றும் பரதிதரன், நரம்பியல் அறுவை சிசிச்சை நிபுணர் அறிவழகன், சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு பேராசிரியர் சரவணன் மற்றும் சரவணன், மருத்துவ கண்காணிப்பாளர் ஜவஹர், இணை மருத்துவ கண்காணிப்பாளர் ஞானகுமார், நிலைய மருத்துவ அலுவலர் மனோஜ்குமார் மற்றும் அனைத்துத் துறை மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் என அனைவரும் கலந்துகொண்டு அவரது உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Organs of young woman who died of brain damage in accident donated

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாா் வாக்காளா் பட்டியல் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

வீட்டு விலைக் குறியீடு 8 புள்ளிகளாக அதிகரிப்பு

செங்கம் பகுதியில் அனுமதியில்லா செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,072 கோடி டாலராகச் சரிவு

SCROLL FOR NEXT