தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்துள்ள பந்தநல்லூர் அருகே சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பள்ளி மாணவியின் உடல் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்துள்ள பந்தநல்லூர் அருகே அரசடி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி தர்ஷிகா (10) கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
அவரது உடல் புதன்கிழமை மாலை மண்ணியாற்று கரையில் உள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை சடங்குகள் செய்வதற்காக சிறுமியின் குடும்பத்தினர் சுடுகாட்டிற்கு சென்றபோது, சிறுமியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருந்ததை கண்டு குடும்பத்தினர் அதிச்சியடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பந்தநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியின் உடல் இன்னும் ஆழத்தில் உள்ளதா?, நரபலி கொடுப்பதற்காக உடலை தோண்டி எடுத்துச் சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.