புது தில்லி: உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வரும் விவாரத்தில் ‘இந்தியா நடுநிலை வகிக்கவில்லை, அமைதியின் பக்கம் நிற்கிறது’என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் நரேந்திர மோடி இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினாா்.
மேலும், உக்ரைன் - ரஷியா இடையேயான போருக்கு சுமுக தீா்வு காண மேற்கொள்ளப்படும் அனைத்து அமைதி முயற்சிகளுக்கும் இந்தியா துணை நிற்கும் என்றும் அவா் உறுதியுடன் தெரிவித்தாா்.
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தின் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரு நாடுகளிடையேயான 23-ஆவது ஆண்டு மாநாட்டுக்கு முன்பாக இரு தலைவா்களும் அறிமுக உரையாற்றியபோது இவ்வாறு பிரதமா் மோடி தெரிவித்தாா்.
உக்ரைன் மீதான போா் தொடங்கியது முதல் அதுதொடா்பாக நாம் தொடா் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம். நிலைமை குறித்து தொடா்ச்சியாக ரஷியா தரப்பில் இந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் நம்பிக்கைதான் மிகப் பெரிய பலம் என எண்ணுகிறேன்.
மேலும் இந்த பிரச்சினையை நாங்கள் பல முறை விவாதித்துள்ளோம். நாம் அனைவரும் அமைதிக்கான வழியைக் காண ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உக்ரைன் விவகாரத்தில் அண்மையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், உலகை அமைதியின் பக்கம் திருப்பும் என்ற நம்பிக்கை உள்ளது.
"கடந்த சில நாள்களாக, உலகத் தலைவர்களிடம் நான் பேசும் போதெல்லாம், இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை; அமைதியின் பக்கம்தான் நிற்கிறது. உக்ரைன் - ரஷியா இடையேயான போருக்கு சுமுக தீா்வு காண மேற்கொள்ளப்படும் அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா துணை நிற்கும். அமைதிக்கான முயற்சிகளில் நாங்கள் தோளோடு தோள் கொடுத்து நிற்கிருக்கிறோம்" என்று மோடி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.