தற்போதைய செய்திகள்

சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா 47 படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, அவர் நடிப்பில் வெளியான ரெட்ரோ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து நடிகர் சூர்யா, இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே மலையாளத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஆவசம் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சூர்யா 47 என்று அழைக்கப்படும் இந்த படத்தில் மமிதா பைஜு முதன்முறையாக நாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கு  சுஷின் ஷியாம் இசை அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் நஸ்ரியா, நஸ்லென், ஆனந்த்ராஜ், இசையமைப்பாளர் ஷியாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவார் மரணத்துக்குப் பின்னணியில் அரசியல்? - சரத் பவார் பதில்!

தங்கமே தங்கமே பாடல்!

ஜன.30-ல் மேற்கு வங்கம் செல்கிறார் அமித் ஷா!

4-வது டி20: இந்தியாவுக்கு 216 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!

டெட் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 40% ஆகக் குறைப்பு - அரசாணை வெளியீடு!

SCROLL FOR NEXT