சாகித்ய அகாதெமி விருது 
தற்போதைய செய்திகள்

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு நிகழ்வு ரத்து...

இணையதளச் செய்திப் பிரிவு

2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக சாகித்ய அகாதெமி விருது கருதப்படுகிறது. நாட்டின் அதிகாரப்பூர்வமாக 24 மொழிகளிலிருந்து கவிதை, சிறுகதை, நாவல், இலக்கிய ஆய்வு படைப்புகளுக்காக எழுத்தாளர்கள் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், இன்று 2025 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

ஆனால், விருதுகளை இறுதி செய்வதில் இழுபறி நீடிப்பதால் இன்றைய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், செய்தியாளர்களுடனான சந்திப்பையும் சாகித்ய அகாதெமி நிர்வாகிகள் ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழில் 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதை,
திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 (ஆய்வு நூல்) நூலுக்காக எழுத்தாளர் ஆ. இரா.வேங்கடாசலபதி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT